புதுடெல்லி,
ஈரான் உச்சபட்சத் தலைவர் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் திடீரென போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரான் உச்சபட்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் அடுத்த மாதம் (ஜூலை) 5 முதல் 9-ந்தேதி வரை ஈரானில் நடக்கிறது.
அதன்படி டெஹ்ரான் மற்றும் கோம் நகரங்களில் 5 முதல் 7-ந்தேதி வரை இறுதிச்சடங்கு நிகழ்வுகளும், 9-ந்தேதி மசாத் நகரில் நல்லடக்கமும் நடக்கிறது. இதில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஈரான் அழைப்பு விடுத்து உள்ளது.
அதன்படி பிரதமர் மோடிக்கும் ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அழைப்பு விடுத்து உள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் இதை மத்திய அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதனால் காமேனி இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பாரா? என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.