தேசிய செய்திகள்

ஈரான் போர் தொடர்பான விவாதம்: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே கருத்து வேறுபாடு

ஒருமித்த கருத்து ஏற்படாமல் கூட்டம் முடிவடைந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் துணை வெளியுறவு மந்திரிகள் மற்றும் சிறப்பு தூதர்களின் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. டெல்லியில் நடந்த இந்த கூட்டத்தில் பிராந்தியத்தில் நடைபெறும் மோதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் ஈரான் மீதான போர் தொடர்பாக நடந்த விவாதத்தில் உறுப்பு நாடுகளிடம் கருத்து வேறுபாடு நிலவியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஒருமித்த கருத்து ஏற்படாமல் கூட்டம் முடிவடைந்துள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலைப்பாடு காரணமாக கூட்டறிக்கை வெளியிடப்படாமல் போனதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.