தேசிய செய்திகள்

காஷ்மீரில் போலீஸ் அதிகாரி இர்பான் அகமது எங்கள் இயக்கத்தில் இணைந்தார் - ஹிஸ்புல் பயங்கரவாத இயக்கம்

காஷ்மீரில் மாயமான போலீஸ் அதிகாரி இர்பான் அகமது ஹிஸ்புல் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநில சிறப்பு போலீஸ்படை அதிகாரி இர்பான் அகமது கடந்த செவ்வாய் கிழமை மாலையில் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் மாயமாகினார். அவரை தேடும் பணியை பாதுகாப்பு படைகள் தொடங்கியது. அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் எங்களுடைய இயக்கத்துடன் இணைந்துவிட்டார் என தகவல் வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் அனைவரும் தங்களுடைய பணியை விட்டுவிட்டு பயங்கரவாத இயக்கத்தில் இணைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாதிகள் போலீசாரை வீட்டு புகுந்து வேலையை விட்டுவிடுமாறு மிரட்டும் சம்பவமும் நடக்கிறது.

இதற்கிடையே சோபூர் பகுதியில் இருந்து 4 பயங்கரவாதிகளை ஜம்மு காஷ்மீர் போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்