இன்றைய இளைஞர்கள் வழிதவறியவர்களோ, திசை தெரியாதவர்களோ அல்ல என்றும், அவர்களைப் புரிந்துகொள்ள கட்டளைகள் பிறப்பிப்பதை விட கலந்துரையாடலே அவசியம் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது: நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்தில் பெரியவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் சூழல் இருந்தது.
ஆனால் இன்றைய தலைமுறை கேள்வி கேட்கிறது. அதற்கு பொறுமையாக விளக்கம் அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அன்பையும், அரவணைப்பையும் வழங்க வேண்டும். அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். குடும்பங்களில் உரையாடலுக்கான இடம் குறைந்து வருகிறது. இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது அவசியம்.
அதனை மீண்டும் உருவாக்க வேண்டும். இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமெனில் அவர்களுடன் தொடர்ந்து பேச வேண்டும். கட்டளையிடுவதால் அல்ல, கலந்துரையாடலால் புரிதல் உருவாகும். உத்தரவுகள் அல்ல, ஒருமித்த கருத்தே உறவை வலுப்படுத்தும்" என்று கூறினார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்னிட்டு டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை அவர் தனது உரையில் நேரடியாக குறிப்பிடாவிட்டலும் தற்போதைய நிலை குறித்து மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டியிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.