தேசிய செய்திகள்

அமர்நாத் பக்தர்கள் சென்ற பஸ் விபத்து; 36 பேர் காயம்

அமர்நாத் தரிசனம் முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில், கடல் மட்டத்தில் இருந்து, 12,730 அடி உயரத்தில் அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான புனித யாத்திரை கடந்த, 3ல் தொடங்கியது. ஆக., 28ல் நிறைவடைகிறது. இதுவரை நான்கு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கனமழையால், ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சில தினங்களுக்கு முன் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நிலைமை சீரானதை அடுத்து யாத்திரை நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில், இன்று காலை காந்தர்பால் மாவட்டத்தில் சென்ற சுற்றுலாப் பேருந்து சாலையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொடர்ந்து, மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபி), ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, அப்பகுதியில் காயமடைந்த அனைத்து பயணிகளையும் மீட்டனர்.

விபத்து தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெளியிட்ட தகவலின்படி,

அமர்நாத் தரிசனம் முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள், ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேவையான அனைத்து உதவிகளையும், சிறந்த மருத்துவச் சிகிச்சையையும் உறுதி செய்யுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.