தேசிய செய்திகள்

ஆந்திர உள்ளாட்சி தேர்தல் கட்சி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் -ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தலில் தோல்வி உறுதி என்ற அச்சத்தில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அராஜகத்தில் ஈடுபடுகிறது என ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.

அமராவதி,

ஆந்திராவில், 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 28-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்தது.

கிராம பஞ்சாயத்துகளுக்கு அடுத்த மாதம் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.இதையொட்டி, முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரு மான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று அமராவதியில் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் தோல்வி உறுதி என்ற அச்சத்தில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட் டணி அராஜகத்தில் ஈடுபடுகிறது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தாக்கு தல், அச்சுறுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுகிறது.

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாக இருந்தும், எங்கள் வேட்பாளர்களால் பல இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT