டெல்லி,
அமெரிக்கா, ஈரான் இடையேயான மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. மேலும், அரபிக்கடலில் ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது அமெரிக்காவும், ஈரானும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனிடையே, கடந்த சில நாட்களில் மட்டும் அரபிக்கடலில் ஓமன் அருகே சென்றுகொண்டிருந்த 3 இந்திய கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோவை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். இந்த உரையாடலின்போது சரக்கு கப்பல்களில் தாக்குதல் நடத்தி 3 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மார்கோ ரூபியோவிடம் ஜெய்சங்கர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.