ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் நேற்று எதிர்பாராத கையெறி குண்டு வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உரி பகுதியிலுள்ள கமல்கோட் முகாமில் வழக்கமான நடைமுறையின்படி உபகரணங்களை ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் ஒப்படைக்கும் பணியின்போது, எதிர்பாராத விதமாக கையெறி குண்டு ஒன்று வெடித்து சிதறியது.
இதில் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு ராணுவத்தின் 92-வது தள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்க னவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.