தேசிய செய்திகள்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து ஆபரேசன் மெலாகுரா என்ற பெயரிலான தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

இதில், இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. பாதுகாப்பு படையினர் நடத்திய இந்த அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.