கொச்சி,
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சிதலைவர்களுக்கும் டெல்லி காவல்துறைக்கும் இடையே தொடர் மோதல்கள் நிலவி வரும் நிலையில், சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிரான தங்களது அடுத்தக்கட்டப் போராட்டத்தைக் கொச்சியில் நாளை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம், முன் அனுமதி இன்றி ஜந்தர் மந்தரில் தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனரான அபிஜித் திப்கே மற்றும் கட்சித் தலைவர்கள் அசுதோஷ்ரங்கா, சௌரவ்தாஸ் ஆகியோரைடெல்லிகாவல் துறை கைது செய்தது.
ஜந்தர் மந்தர் பகுதியை அங்கீகரிக்கப்பட்ட போராட்டக் களமாக இருப்பதிலிருந்து அரசு ரத்து செய்ததை யடுத்து இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தடுப்புகள் அமைக்கப்பட்டி ருந்த போராட்டக் களத்திற்குள் அத்துமீறி நுழைந்த கட்சித் தலைவர்களான தாஸ் மற்றும் ரங்கா ஆகியோர், தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பாக தேசியக் கொடியை அசைத்து தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்தச் சம்பவங்கள், சிறப்பு தீவிர திருத்தப் பணியை ரத்து செய்யக் கோரி அக்கட்சி நடத்தி வரும் தொடர் பிரசாரத்திற்குப் புதிய பரிமாணத்தை அளித்துள்ளன. இந்தப் பின்னணியில், கேரள மாநிலம் கொச்சியில் நவம்பர் 7 ஆம் தேதி மாபெரும் கண்ட னப் போராட்டத்தை நடத்தப் போவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நேற்று அறிவித்துள்ளது.
ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள், சிறப்பு தீவிர திருத்தப்பணியை ரத்து செய்யுங்கள் என்றமுழக்கத்துடன் இந்தப் போராட்டம் ராஜேந் திர மைதானத்தில் மாலை 4 மணி முதல் நடைபெறும் என்று எக்ஸ் சமூக வலைத ளப் பதிவில் அக்கட்சி அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிராக அக்கட்சிதொடர்ந்து கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அந்தப் பணியை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தும் கோரிக்கையின் ஒரு முக்கிய பகுதியாகவே இந்தக் கொச்சிப் போராட்டம் நடைபெறவுள்ளது.