புதுடெல்லி,
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதைத்தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர்.
இதற்கிடையே ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகவும். அமைதிப்பத்தி த்தில் கையொப்பமிட்ட பிறகு விதிகளை மீறியதாகவும் கூறி கரப்பான் பூச்சி ஜனதா (சி. ஜே.பி.) கட்சி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா ஆகியோரை டெல்லி போலீசார் கடந்த மாதம் 13-ந் தேதி தேதி கைது செய்தனர்.
அவர்களை முதல்கட்டமாக 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப் பட்டது.
அவர்கள் மீதான இரு வழக்கும் டெல்லி குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. நீதிமன்ற காவல் முடிவடைந்த பிறகு இருவரும் மந்திர் மார்க் போலீஸ் நிலையத்தில் உள்ள சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.