புதுடெல்லி,
என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வான ஜே.இ.இ. மெயின் முதல்கட்ட தேர்வு இம்மாதம் 21,24,25,29 மற்றும் மே 1, 4-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது இத்தேர்வு வருகிற ஜூன் 20 முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் என்று தேசிய டெஸ்டிங் ஏஜென்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல வருகிற மே 24 முதல் 29-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த ஜே.இ.இ. மெயின் 2-ம் கட்டத் தேர்வு, வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.