தேசிய செய்திகள்

ஜார்கண்ட்; சாலை விபத்தில் 7 பேர் பலி

ஸ்கூட்டி ஒன்று விபத்தில் சிக்கியது. இதனை தொடர்ந்து, பலர் அந்த இடத்தில் கூடினர்.

குந்தி

ஜார்கண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.

ஜார்கண்டின் குந்தி மாவட்டத்தில் கர்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டி ஒன்று விபத்தில் சிக்கியது. இதனை தொடர்ந்து, பலர் அந்த இடத்தில் கூடினர்.

அப்போது அந்த வழியே லாரி ஒன்று விரைவாக வந்தது. அது வந்த வேகத்தில் கூடியிருந்த மக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT