தேசிய செய்திகள்

ஜார்கண்ட்: சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; எரிந்து சாம்பலான 4 கனரக லாரிகள்

எளிதில் தீப்பிடித்து எரிய கூடிய பொருட்களை ஏற்றி சென்ற வாகனம் மீது மற்றொரு வாகனம் பின்னால் இருந்து மோதியது.

தும்கா

ஜார்கண்டில் தும்கா நகரில் தீப்பற்றி எரிய கூடிய பொருட்களை ஏற்றி சென்ற வாகனம் மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கி கொண்டன.

இதில் 4 கனரக லாரிகள் எரிந்து சாம்பலாகி உள்ளன. இதில் பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதுபற்றி தும்கா மாவட்ட அரசு உயரதிகாரி கவுசல் கூறும்போது, எளிதில் தீப்பிடித்து எரிய கூடிய பொருட்களை ஏற்றி சென்ற வாகனம் மீது மற்றொரு வாகனம் பின்னால் இருந்து மோதியது.

இந்த விபத்தில் தீப்பற்றி வாகனம் எரிந்துள்ளது. இதுபோன்று 4 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்து விட்டன.

அந்த வாகனத்தின் உள்ளே ஒருவர் தூங்கியபடி இருந்துள்ளார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. ஓட்டுநர் ஒருவரும் சிக்கி கொண்டார். இதனால், 2 பேர் தீயில் எரிந்து போயுள்ளனர் என தெரிய வந்துள்ளது. சம்பவம் பற்றி அறிந்து தீயணைப்பு துறையினர் சென்று தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எத்தனை பேர் பலியாகி உள்ளனர் என்ற விவரம் உடனடியாக தெரிய வரவில்லை என்றார்.