ராஞ்சி
ஜார்கண்டில் உள்ள பிர்லா தொழில்நுட்ப மையத்தின் விடுதியில் மர்ம மரணம் அடைந்து கிடந்த எம்.எஸ்சி. மாணவியின் உடல் மீட்கப்பட்டது.
ஜார்கண்டில் ராஞ்சி நகரில் உள்ள பிர்லா தொழில்நுட்ப மையத்தின் (பி.ஐ.டி.) விடுதியில் எம்.எஸ்சி. படித்து வந்த மாணவி அஞ்சலி. இவர் அந்த மையத்தின் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் விடுதியில் நேற்றிரவு மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். இதுபற்றி பி.ஐ.டி. காவல் நிலைய போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விடுதியில் கிடந்த உடலை கைப்பற்றினர். அந்த இடத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.
எனினும், டைரி ஒன்று கிடைத்தது. அதில், குடும்பம் தொடர்பான விவகாரங்கள் எழுதப்பட்டு இருந்தன. அந்த மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. போலீசார் கூறும்போது, பிரேத பரிசோதனை இன்று நடைபெறும். அதன் அடிப்படையில் பிற விசயங்கள் தெரிய வரும் என தெரிவித்தனர்.