தேசிய செய்திகள்

அனைவருக்கும் வேலை: ஓய்வூதியம் உயர்வு- கேரளாவில் இடதுசாரி கூட்டணி தேர்தல் அறிக்கை

கேரளாவில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பினராயி விஜயன் தலைமையிலான அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கேரள மாநிலத்தில் வருகிற 9-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், நேற்று கோழிக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அறிக்கையாக வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

  • கேரள மாநிலத்தில் நலத்திட்ட ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

  • இதன் மூலம் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பயன்பெறுவர்.

  • மாநிலத்தில் படிப்பை முடிக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

  • வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.

  • இந்த கல்வியாண்டில் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.

  • 50 சதவீத பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்; படித்தவர்களின் தொழில் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.