தேசிய செய்திகள்

ஜோதிபா புலேவின் 200-வது பிறந்தநாள் விழா: பாராளுமன்றத்தில் தலைவர்கள் மரியாதை

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா ஜோதிபா புலேவின் திருவுருவசிலைக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புதுடெல்லி,

சமூக ஆர்வலரான மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்தநாள் விழா மத்திய அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதனைதொடர்ந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா ஜோதிபா புலேவின் திருவுருவசிலைக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

டெல்லியில் மத்திய அரசு சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். அதேபோல பாஜக அமைச்சர்களுடனும் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.