கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 25 லட்சம் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் கர்நாடகத்தை சேர்ந்த கன்னடர்களை விட பிற மாநிலங்களை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.சமீபத்தில் ஒரு கன்னட பெண், பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறு வனங்கள் கன்னட மொழி பேசுபவர்களை பணிக்கு எடுப்பது இல்லை, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மாநில மொழியினருக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பதாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதற்கு பதிலளித்த முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், தகுதியான கன்னடர்களை பணியமர்த்த புறக்கணித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் கன்னட அமைப்பினர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் கன்னட அமைப்பினர் பெங்க ளூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நேரில் சென்று, அங்கு பணியாற்றும் கன்னடர்கள், பிற மொழியினர் குறித்து விவரங்களை சேகரித்து வரு கிறார்கள். இதற்கு அந்த நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படு கிறது.
இதற்கிடையே தமிழகத்தில் வேலூரில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி பி.எஸ். தனுஷ்குமார் என்பவர், வேலை இல்லாதவர்கள் வேலைக்கு செல்பவர்களை தடுக்கிறார்கள் என்ற கருத்தை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். இதற்கு கன்னட அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.