தேசிய செய்திகள்

கர்நாடகா: சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 3 தொழிலாளர்கள் பலி; 5 பேர் காயம்

கர்நாடகாவில் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் காயம் அடைந்தனர்.

பெலகாவி,

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தின் மரகும்பி கிராமத்தில் சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இதில் இருந்த பாய்லர் ஒன்று திடீரென இன்று வெடித்து விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலியானார்கள். அவர்கள் அக்சய் தொபடே, தீபக் முன்னோலி மற்றும் சுதர்சன் பனோஷி என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

அவர்கள் தவிர 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு நகரில் உள்ள கே.எல்.இ. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆலையில் பாய்லர் வெடித்ததற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி போலீசார் தரப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது என பெலகாவி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்ட ராமராஜன் கூறினார்.