தேசிய செய்திகள்

"மேகதாது அணை கட்ட அனுமதி வேண்டும்" பிரதமரிடம் கர்நாடக முதல்-மந்திரி நேரில் வேண்டுகோள்

காவிரியை மறித்து மீண்டும் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவுக்கு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பெங்களூரு,

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டே தீரும். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி இன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு சென்றார். அவரை கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நேரில் சென்று வரவேற்றார்.

பிரதமர் மோடி, சுவாமி விவேகானந்தர் யோக அனுசந்தனா சமஸ்ஹானத்தின் குடியிருப்பு தலைமையகமான பிரசாந்தி குடிரம் வளாகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். அப்போது பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். அப்போது பொன் விழா நிர்வாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சுவாமி விவேகானந்ஹா யோக அனுசந்தனா சமஸ்தானத்தின் வளாகத்தையும் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து, கர்நாடக மாநிலம், மைசூருவில் காஸ்மோஸ் கோளரங்கத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந் நிகழ்வில் அம்மாநில முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி முன்னிலையில் டி.கே. சிவகுமார் பேசியதாவது;

மேகதாது அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பை அளித்து விட்டது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டே தீரும். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. சட்ட ரீதியாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல்களை மத்திய அரசு தரவேண்டும்.

இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம். அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கர்நாடகாவுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு சிவகுமார் பேசினார்.

இந்தநிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதி தர, பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்-மந்திரி டி.கே சிவக்குமார் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மைசூரில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றியபோது, மேகதாது அணை கட்ட பிரதமர் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

காவிரியை மறித்து மீண்டும் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவுக்கு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேகதாது அணைக்கு எந்தவித அனுமதியும் தரக்கூடாது என அண்மையில் பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT