தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 1-ந் தேதி முதல் செல்போன் செயலியில் வருகைப்பதிவு கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு

இந்த செல்போன் செயலி செயற்கை நுண்ணிய தொழில்நுட்ப வசதியை கொண்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் அரசு ஊழியர்களுக்கு வருகிற 1-ந் தேதி முதல் செல்போன் செயலி வருகைப்ப திவை குறிக்க வேண்டியது கட்டாயம் என்று கூறி அரசு உத்தரவிட்டுள்ளது.

வருகைப்பதிவு கட்டாயம்

கர்நாடகத்தில் அரசு துறைகளில் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர் களுக்கு கர்நாடக அரசு நவீன வருகைப்பதிவு முறையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த புதிய முறை வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அரசு ஊழியர்கள் 'கடமை' (கர்த்தவ்ய) என்ற செல்போன் செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இதை வருகிற 25-ந் தேதிக்குள் செய்ய வேண்டும். வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் அனைவரும் அந்த செயலியில் வருகைப்பதிவை கட்டாயம் குறிக்க வேண்டும். அவர்கள் பணிக்கு வந்துவிட்டு வேறு எங்காவது வெளியில் சென்றால் அந்த செயலி மூலம் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிய முடியும்.

தடை இல்லை

இதனால் அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் கட்டாயம் தங்களின் அலுவலகத்தில் இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் செல்ல தடை இல்லை. உரிய அனுமதி இன்றி வெளியில் சென்றால் அந்த செல்போன் செயலி அவர்கள் இருக்கும் இடத்தை காட்டி கொடுக்கும். இந்த செல்போன் செயலி ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளில் பணியாற்றும் அனைத்து வகையான ஊழியர்களுக்கும் இந்த வருகைப்பதிவு முறை கட்டாயம் ஆகும்.

அடுத்து வரும் நாட்களில் இரவு பணியை மேற்கொள்பவர்களுக்கும் இந்த புதிய முறை கொண்டுவரப்பட உள்ளது. இந்த செல்போன் செயலி செயற்கை நுண்ணிய தொழில்நுட்ப வசதியை கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT