பஸ் கட்டணம் 
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பால் விலையை தொடர்ந்து பஸ் கட்டணமும் உயர்வு: மக்கள் அதிர்ச்சி

கர்நாடகாவில் சமீபத்தில்தான் பால் விலை உயர்த்தப்பட்டது. லிட்டர் ரூ.8 உயரத்தப்பட்ட நிலையில் தற்போது பஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கர்நாடகாவில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயங்கும் 4 போக்குவரத்துக் கழகங்களின் பஸ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் அறிவித்துள்ளார். இதில் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகத்தின் பஸ் கட்டணம் அதிகபட்சமாக ரூ.9 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகர பஸ்களில் அதிகபட்சமாக ரூ.10 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகர பஸ் கட்டணம் விவரம்:

*குறைந்தபட்ச கட்டணம் ரூ.6-ல் இருந்து ரூ.10 ஆக உயர்வு.

*அதிகபட்ச கட்டணம் ரூ.35-ல் இருந்து ரூ.45 ஆக உயர்வு.

*ஏசி பஸ்களின் அதிகபட்ச கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.90 ஆக உயர்வு.

*கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு இயக்கப்படும் பஸ்களின் அதிகபட்ச கட்டணம் ரூ.405-ல் இருந்து ரூ.425 ஆக உயர்வு.

கட்டண உயர்வுக்கு காரணம் என்ன?

இதுகுறித்து அமைச்சர் பைரதி சுரேஷ் கூறுகையில், தமிழ்நாடு மற்றும் மராட்டிய மாநில அரசுகளும் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. டீசல் விலை அதிகரித்துள்ளதால் கர்நாடகாவிலும் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . ராஜஹம்சா மற்றும் ஏசி பஸ்கள் போன்ற சொகுசு சேவைகளுக்கான கட்டணங்கள், சந்தையில் நிலவும் போட்டி மற்றும் கட்டணங்களை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது”என்றார்.

பெண்களுக்கு இலவச பஸ் பயணம் தொடரும்

கர்நாடகாவில் பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாகப் பயணம் செய்யும் வகையில் 'சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் சொகுசு வசதி இல்லாத அரசு பஸ்களில் மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் வசதி தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் சமீபத்தில்தான் பால் விலை உயர்த்தப்பட்டது. லிட்டர் ரூ.8 உயரத்தப்பட்ட நிலையில் தற்போது பஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

SCROLL FOR NEXT