தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று புதிதாக 3,652 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகாவில் இன்று புதிதாக 3,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் இன்று 3,652 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,27,064 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,192 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,053 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,65,261 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 50,592 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.