தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று மேலும் 1,440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் இன்று 1,440 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,87,667 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,808 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 983 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,51,690 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 24,150 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.