கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் புதிதாக 20,628 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 492 பேர் பலி

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் மாநிலத்தில் இன்று 20 ஆயிரத்து 628 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 67 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 066 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 42 ஆயிரத்து 444 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 89 ஆயிரத்து 064 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், கொரோனா தாக்குதலுக்கு ஒரேநாளில் 492 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.