தேசிய செய்திகள்

கர்நாடகா: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நிறைவு; 1 கோடி பெயர்கள் நீக்கம்

கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு முன் 5 கோடியே 54 லட்சத்து 32 ஆயிரத்து 314 வாக்காளர்கள் இருந்தனர்.

பெங்களூரு,

கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி கடந்த ஜூன் 30ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 17ம் தேதி நிறைவடைந்தது.

1 கோடி பெயர்கள் நீக்கம்

இந்நிலையில், கர்நாடகாவில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வாக்காளர் பட்டியலில் இருந்து 1 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

மாநில தலைமை தேர்தல் அதிகாரி அன்புகுமார், நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இது தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில்,

கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு முன் 5 கோடியே 54 லட்சத்து 32 ஆயிரத்து 314 வாக்காளர்கள் இருந்தனர்.

இதில், அடையாளம் கண்டறிய முடியாதவர்கள் 15 லட்சத்து 17 ஆயிரத்து 042; நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் 65 லட்சத்து 45 ஆயிரத்து 679; இறந்தவர்கள் 16 லட்சத்து 39 ஆயிரத்து 664; போலி வாக்காளர் கள் 7 லட்சத்து 09 ஆயிரத்து 870; பிறர் 3 லட்சத்து 83 ஆயிரத்து 884 என மொத்தம் 1 கோடியே 07 லட்சத்து 96 ஆயிரத்து 339 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். நீக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19.4 சதவீதம்.

இறுதி வாக்காளர் பட்டியலில் 4 கோடியே 46 லட்சத்து 35 ஆயிரத்து 975 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். பெங்களூரில் எஸ்.ஐ.ஆர்., பணிக்கு முன் 1 கோடியே 03 லட்சத்து 88 ஆயிரத்து 363 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் 56 லட்சத்து 99 ஆயிரத்து 660 வாக்காளர்கள் உள்ளனர். 46 லட்சத்து 88 ஆயிரத்து 703 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பார்க்கலாம்.

பெயர் இடம்பெறாதவர்கள் இன்று முதல், செப்டம்பர் 23ம் தேதி வரை ஆட்சேபனை தெரி வித்து விண்ணப்பிக்கலாம். அக் டோபர்27ம்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.