பெங்களூரு,
தமிழக அரசு தமிழகத்துக்கு 11 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை திறக்க உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தொடர்ந்தன. அந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே வேளையில் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கடந்த 21-ந்தேதி கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு சுமார் 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது. அதாவது மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜசாகர் எனும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை முதல் வினாடிக்கு 5,033 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 2-வது நாளான நேற்றும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 5,333 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
இதற்கிடையே மண்டியா மாவட்ட விவசாயிகள், பாசனத்துக்கு தண்ணீர் திறக்காமல் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடு வதாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.