தேசிய செய்திகள்

காஷ்மீர்: 5 பயங்கரவாதிகள் கைது - ஆயுதங்கள் பறிமுதல்

பயங்கரவாதிகளிடமிருந்து 2 துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள், தோட்டாக்கள் என பல்வேறு ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

5 பயங்கரவாதிகள் கைது

இந்நிலையில், காஷ்மீரின் குல்காம் மாவட்டம் ஹெவான் ஷதீர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அப்பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் தஜ்முல் ஹசன் மூர், ரஹமத் அலி நைஹு, தஹ்ரீம் அகமது பட், மன்சூர் அகமது பட், கிபியத் அகமது தர் ஆகிய 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டன. மேலும், பயங்கரவாதிகளிடமிருந்து 2 துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள், தோட்டாக்கள் என பல்வேறு ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT