தேசிய செய்திகள்

காஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் பற்றி விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், காஷ்மீர் தாக்குதல் குறித்தும், அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்படும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT