ஸ்ரீநகர்,
காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீரில் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கடந்த 11ம் தேதி காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப்பணியில் இருந்த பாதுகாப்புப்படையினர் மீது லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் அமைப்பின் 2 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தாக்குதல் உமர் நிசீர் டர் என்ற பயங்கரவாதி நேற்று முன் தினம் சுட்டுக்கொல்லப்பட்டான். இதனை தொடந்து தப்பியோடிய லதீப் பட் என்ற மற்றொரு பயங்கரவாதியை பாதுகாப்புப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
என்கவுன்டர்
இந்நிலையில், காஷ்மீரின் குல்காம் பகுதியில் பயங்கரவாதி உமர் நிசீர் டர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதி உமர் நிசீர் டர் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினான்.
இதையடுத்து பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதி லதீப் பட் சுட்டுக்கொல்லப்பட்டான். என்கவுன்டர் நடந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.