தேசிய செய்திகள்

காஷ்மீர்: 2 விபத்துகளில் ஒருவர் பலி; 56 பேர் காயம்; கவர்னர் இரங்கல்

அதிரடி விரைவு படை மற்றும் சி.ஆர்.பி.எப். போலீசார் மீட்பு பணிக்காக உடனடியாக புறப்பட்டு சென்றனர்.

ஜம்மு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏற்பட்ட 2 விபத்துகளில் ஒருவர் பலியானார். 56 பேர் காயம் அடைந்தனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரத்தில் 2 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், சுற்றுலா பயணிகளுடன் சென்ற பஸ்சில் ஓட்டுநர் கவனக்குறைவாக ஓட்டியதில் மலையோரம் மோதி நின்றது.

பெண் பயணி பலி

இதில் பெண் பயணி ஒருவர் பலியாகி விட்டார். 47 பேர் காயமடைந்தனர். இந்த தகவல் அறிந்து, அதிரடி விரைவு படை மற்றும் சி.ஆர்.பி.எப். போலீசார் உடனடியாக புறப்பட்டு சென்றனர். மீட்பு பணிக்காக அவர்கள் சென்றபோது, அந்த வாகனம் கவிழ்ந்தது. இதில் 6 போலீசார் மற்றும் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயமடைந்தனர்.

இந்த 2 விபத்துகளில் மொத்தம் 56 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த இரு சம்பவங்களுக்கும் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா வருத்தம் தெரிவித்ததுடன் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT