தேசிய செய்திகள்

காஷ்மீர்: பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை

தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 11ம் தேதி காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப்பணியில் இருந்த பாதுகாப்புப்படையினர் மீது லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் அமைப்பின் 2 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தாக்குதல் uமர் நிசீர் டர் என்ற பயங்கரவாதி நேற்று முன் தினம் சுட்டுக்கொல்லப்பட்டான்.

துப்பாக்கி சண்டை

இந்நிலையில், தப்பியோடிய மற்றொரு பயங்கரவாதி லதீப் பட்டை பாதுகாப்புப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். குல்காம் பகுதியில் இன்று காலை பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. மோதல் நடைபெறும் பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT