நரேந்திர மோடிக்கு அழைப்பு 
தேசிய செய்திகள்

காவ்யா மாறன்- அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி - பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு

கலாநிதி மாறன் - பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவிற்கான முதல் அழைப்பிதழ் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் நேரில் சந்தித்து, தனது மகள் காவியா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினார்.

பிரதமருக்கு அழைப்பிதழ்

சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது வீட்டில் நேரில் சந்தித்துள்ளார். மேலும், இந்த சந்திப்பின் போது, கலாநிதி மாறனின் மகள் காவியா கலாநிதி மாறன் - பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவிற்கான முதல் அழைப்பிதழ் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. விழாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு, அவர்கள் முறைப்படி அழைப்பு விடுத்தனர்.

குடும்பத்தினர் பங்கேற்பு

இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் போது கலாநிதி மாறனின் மனைவி காவேரி கலாநிதி மற்றும் மணமகன் அனிருத் ரவிச்சந்தரின் பெற்றோரான ரவிச்சந்தர், லட்சுமி ரவிச்சந்தர் ஆகியோர் உடனிருந்தனர். பிரதமரிடம் அழைப்பிதழ் வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பிரம்மாண்ட வரவேற்பு விழா

மணமக்கள் காவியா மாறன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் பிரம்மாண்ட திருமண வரவேற்பு விழா வரும் நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பெரும் விமரிசையாக நடைபெற உள்ளது.

திருமண விழா

கிரீஸ் நாட்டில் அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந்தேதி அனிருத்-காவ்யா மாறன் திருமணம் நடைபெறுகிறது. அனிருத்-காவ்யா மாறன் திருமணம் முதலில் செஷல்ஸ் நாட் டில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கிரீஸ் நாடு தேர்வு செய்யப்பட்டிருக்கிறதாம்.

4 தனி விமானங்கள் ஏற்பாடு

கடற்கரைகள், அழகிய கட்டிடங்கள், கண்கவர் இயற்கைக் காட்சிகள் என உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்ட கிரீஸ், பிரமாண்டமான திருமண நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற இடமாக கருதப்படுகிறது. அந்தவகையில் அனிருத்-காவ்யா மாறனின் திருமணத்தை கிரீசில் நடத்திட இரு குடும்பத்தாரும் முடிவு செய்துள்ளார்கள். இந்த திருமணத்தில் முன்னணி பிரபலங்கள், இரு குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைத்து செல்லப்பட இருக்கிறார்கள். இதற்காக 4 தனி விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT