காசர்கோடு,
கேரளாவில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் காடுகளில் உள்ள பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி ஊருக்குள் வந்துவிடுகிறது. இந்நிலையில் வீடுகளில் தஞ்சமடையும் பாம்புகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
காசர்கோடு மாவட்டம், அடூரில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த பாம்பு, வீட்டின் மேசை மீது ஊர்ந்து சென்றபோது, மேசை மீது இருந்த தங்க மோதிரம் பாம்பின் உடம்பில் சிக்கியதாக தெரியவரும் நிலையில், பாம்பை பிடித்த வனத்துறையினர், மோதிரத்தை நீக்கிவிட்டு பாம்பை பத்திரமாக வனப்பகுதியில் விடுவித்தனர்.