தேசிய செய்திகள்

கேரள சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் - விவரம்

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

திருவனந்தபுரம்

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதேவேளை, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், கேரளாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை இங்கு காண்போம்.

கேரளா: (140 தொகுதிகள் - பெரும்பான்மைக்கு 71 தொகுதிகள்)

ஓட் வைப் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்

இடது ஜனநாயக முன்னணி (இடதுசாரிகள்) - 58 முதல் 68 தொகுதிகளில் வெற்றி

ஐக்கிய ஜனநாயக கூட்டணி (காங்கிரஸ் கூட்டணி) - 70 முதல் 80 தொகுதிகளில் வெற்றி

பாஜக கூட்டணி - 0 முதல் 4 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0

போல் ஆப் போல்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்

இடது ஜனநாயக முன்னணி (இடதுசாரிகள்) - 55 முதல் 65 தொகுதிகளில் வெற்றி

ஐக்கிய ஜனநாயக கூட்டணி (காங்கிரஸ் கூட்டணி) - 71 முதல் 81 தொகுதிகளில் வெற்றி

பாஜக கூட்டணி - 2 முதல் 6 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0

மெட்ரிக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்

இடது ஜனநாயக முன்னணி (இடதுசாரிகள்) - 62 முதல் 69 தொகுதிகளில் வெற்றி

ஐக்கிய ஜனநாயக கூட்டணி (காங்கிரஸ் கூட்டணி) - 71 முதல் 79 தொகுதிகளில் வெற்றி

பாஜக கூட்டணி - 1 முதல் 4 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0 முதல் 3 தொகுதிகளில் வெற்றி

பி-மார்கியூ நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

இடது ஜனநாயக முன்னணி (இடதுசாரிகள்) - 62 முதல் 69 தொகுதிகளில் வெற்றி

ஐக்கிய ஜனநாயக கூட்டணி (காங்கிரஸ் கூட்டணி) - 71 முதல் 79 தொகுதிகளில் வெற்றி

பாஜக கூட்டணி - 1 முதல் 4 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0 முதல் 3 தொகுதிகளில் வெற்றி

ஜேவிசி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்

இடது ஜனநாயக முன்னணி (இடதுசாரிகள்) - 49 முதல் 62 தொகுதிகளில் வெற்றி

ஐக்கிய ஜனநாயக கூட்டணி (காங்கிரஸ் கூட்டணி) - 72 முதல் 84 தொகுதிகளில் வெற்றி

பாஜக கூட்டணி - 3 முதல் 7 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0

ஆக்சஸ் மை இந்தியா நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்

இடது ஜனநாயக முன்னணி (இடதுசாரிகள்) - 49 முதல் 62 தொகுதிகளில் வெற்றி

ஐக்கிய ஜனநாயக கூட்டணி (காங்கிரஸ் கூட்டணி) - 78 முதல் 90 தொக்குதிகளில் வெற்றி

பாஜக கூட்டணி - 0 முதல் 3 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0