தேசிய செய்திகள்

தேர்தலில் போட்டியிட கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்

கேரளாவின் தர்மடம் தொகுதியில் பினராயி விஜயன் 3வது முறையாக போட்டியிடுகிறார்.

கண்ணூர் (கேரளா),

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கான தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில், கேரளா (140 தொகுதிகள்) மற்றும் அசாம் (126 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் (30 தொகுதிகள்) ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும்.

இந்நிலையில் கேரளாவின் தர்மடம் சட்டமன்ற தொகுதியில் அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். தர்மடம் தொகுதியில் அவர் 3வது முறையாக போட்டியிடுகிறார். இதற்கு முன்னர் அவர் குத்துப்பரம்பா தொகுதியில் மூன்று முறையும், பையனூரில் ஒரு முறையும் வெற்றி பெற்றிருந்தார்.

தர்மடம் தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) வி.பி.அப்துல் ரஷீத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது, அதேசமயம் பாஜக கே.ரஞ்சித்தை தனது வேட்பாளராக அறிவித்துள்ளது.