புதுடெல்லி,
கேரள முதல்- மந்திரி வி. டி. சதீசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். கேரளத்தின் எர்ணாகுளம் அருகே நெட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் வி. டி. சதீசன். அண்மையில் நடந்து முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய விடி சதீசன் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்.
விடி சதீசன் இன்று தனது 62-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து, அவருக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன. அந்த வகையில், வி. டி. சதீசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். கேரள முதல் மந்திரியா பதவியேற்ற சதீசன் கடந்த 26 ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.