தேசிய செய்திகள்

மாவோயிஸ்டுகள் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்-கேரளம் ஐகோர்ட்டு உத்தரவு

கொச்சி என்.ஐ.ஏ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஜாமீன் கேட்டு மாவோயிஸ்டுகள் 3 பேர் கேரளா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

கொச்சி அருகே எடக்கரா பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு ஆயுத பயிற்சி முகாம் அமைத்து, மாவோயிஸ்டுகளுக்கு ஆயுத பயிற்சி அளித்த வழக்கில் மாவோயிஸ்டுகளான திருச்சூர் பகுதியை சேர்ந்த ராஜன், தமிழ்நாட்டை சேர்ந்த ராகவேந்திரன், சத்தீஸ்கரை சேர்ந்த தீபக் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஆயுத பயிற்சி முகாமில் வைத்து கைது செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை கொச்சி என்.ஐ.ஏ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஜாமீன் கேட்டு மாவோயிஸ்டுகள் 3 பேர் கேரளா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.அவர்கள் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்க வேண்டும். விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் தவறாமல் ஆஜராக வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.