கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் அதிகரித்த கொரோனா பாதிப்பு: புதிதாக 31,445 பேருக்கு தொற்று

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 31,445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 38,83,429 ஆக அதிகரித்துள்ளது

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,70,292 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 20,271 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 36,92,628 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 215 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 19,972 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,65,273 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 19.03 சதவிகிதமாக உள்ளது என்று கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.