AI Image 
தேசிய செய்திகள்

கேரளம்: மலையில் இருந்து பாறை உருண்டு விழுந்து ஒருவர் உயிரிழப்பு

பாறை விழுந்ததில், தண்ணீர் தொட்டிக்கும், பாறைக்கும் இடையே செபாஸ்டியன் சிக்கிக் கொண்டார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கடமக்குழி பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன்(வயது 59). இவர் இன்று காலை தனது மனைவியுடன், அவர்களுடைய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

உருண்டு விழுந்த பாறை

அப்போது, அவரது தோட்டத்திற்கு அருகில் உள்ள மலையின் மேலிருந்து ஒரு பாறை உருண்டு விழுந்தது. இதனை கவனித்த செபாஸ்டியனும், அவரது மனைவியும் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் செபாஸ்டியன் ஓடிய திசையில் பாறை வேகமாக உருண்டு விழுந்தது.

தீயணைப்புத்துறை

அங்கிருந்த தண்ணீர் தொட்டி அருகே செபாஸ்டியன் நின்றபோது அவர் மீது பாறை விழுந்ததில், தண்ணீர் தொட்டிக்கும், பாறைக்கும் இடையே செபாஸ்டியன் சிக்கிக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

வழக்குப்பதிவு

அவர்கள் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு செபாஸ்டியனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேத பரிசோதனைக்கு பிறகு செபாஸ்டியனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT