தேசிய செய்திகள்

கேரளத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வருகிற நாட்களில் தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கேரளத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மீதமுள்ள ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT