தேசிய செய்திகள்

கேரளாவில் புதிதாக 32,762 பேருக்கு கொரோனா பாதிப்பு: 112 பேர் உயிரிழப்பு

கேரளாவில் இன்று மேலும் 32,762 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 32,762 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில்இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 22 லட்சத்து 03 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது.

மாநில முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 112 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,724 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 48,413 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 18,94,518 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 3,31,860 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.