தேசிய செய்திகள்

கேரளா: காட்டு யானை தாக்கி பெண் பலி

யானை மிதித்ததில் பலத்த காயமடைந்த மாரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருவனந்தபுரம்,

காலை வேளை

கேரளா மாநிலம் சூரியநெல்லி திருவள்ளூவர் மலை அருகே உள்ள சிங்குக்கண்டம் பகுதியை சேர்ந்த வெள்ளசாமியின் மகள் மாரி (36) வாழ்ந்து வந்தார். நேற்று முன்தினம் காலை தனது மகனை அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த காலை வேளையில் அப்பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக வழி ப்பாதை இருள் சூழ்ந்து காணப்பட்டது.

யானை தாக்குதல்

இந்த நிலையில் தனது மகனை பள்ளிக்கு அழைத்து செல்ல வேண்டிய நேரம் என்பதால் சுமார் காலை எட்டு மணியளவில் சிங்குக்கண்டம் வளைவு பகுதியை கடந்து சென்ற போது அடர்ந்த மூடுபனி காரணமாக யானை இருப்பதை தெரியாமல் சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு காட்டு யானை அவர்களை திடீரென தாக்கியது. இந்த சம்பவத்தில் யானை மிதித்ததில் பலத்த காயமடைந்த மாரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

இந்த தாக்குதல் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த உள்ளூர் மக்கள் உடனடியாக வந்து வனத்துறை அதிகாரிகளுக்கு யானை தாக்குதல் குறித்த தகவலை தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தாக்குதலில் காயமடைந்த சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த யானை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.