தேசிய செய்திகள்

கேரளா: சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 95 ஆண்டுகள் சிறை

கேரளம் மாநிலம் இலகமண் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

கேரளா,

கேரள மாநிலத்தில் 15 வயது சிறுமி பலாத்கார வழக்கில் தொடர்புடைய தொழிலாளிக்கு 95 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

கேரளம் மாநிலம் இலகமண் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 45). தொழிலாளியான இவர் திருமணமானவர். இவர் 15 வயது சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

குற்றவாளிக்கு 95 ஆண்டுகள் சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை வர்க்கலா போக்சோ விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி பரபரப்பு தீர்ப்பை அளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட மனோஜை குற்றவாளி என அறிவித்த அவர் 95 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT