நகரி,
ஐதராபாத் நகர் சிக்கந்தராபாத் பகுதியில் கவுக்கரில் உள்ள வில்லா ஆர்கேட்டில் மில்டன் பெர்னாண்டஸ் என்பவர் தனது 6 வயது மகள் அரேலியா மவுசசுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்த மகளை யாரோ கடத்திச் சென்று விட்டதாக பொல்லாரும் போலீஸ் நிலையத்தில் மில்டன் புகாரளித்தார். இதையடுத்து 'உன் குழந்தை உயிருடன் வேண்டுமென்றால் ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும்' என மில்டனின் தொலைபேசிக்கு மிரட்டல் வந்துள்ளது. அதன்பேரில் போலீசார் தேடுதலை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் வில்லாவில் உள்ள செல்லாரில் சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விக்ரம் என்பவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக மில்டன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.