தேசிய செய்திகள்

கொல்கத்தா: மின்சாரம் தாக்கி 3 யானைகள் உயிரிழப்பு

2 பெரிய யானைகளாகும், ஒரு குட்டியும் இறந்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் பசிம் மேதினிபூர் மாவட்டம் சால்போனி பகுதியில் யானைகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

மின் வேலி

வனச்சரகர் மற்றும் அலுவலர்கள் விரைந்து சென்று பார்த்தபோது பிரிகாட்டா வனச்சரகத்தையொட்டிய தோட்ட பகுதியில் அமைக் கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்தது தெரியவந்தது. அவற்றில் 2 பெரிய யானைகளாகும், ஒரு குட்டியும் இறந்துள்ளது.

இதுகுறித்து மாநில வனத்துறை மந்திரி மனோஜ் உரான் கூறும்போது, "மின்சாரம் தாக்கி 3 யானைகள் இறந்துள்ளன. இதுகுறித்து வனத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. வயல்களில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதைத் தடுக்க, சில உள்ளூர்வாசிகள் மின்வேலி அமைத்திருக்கலாம்" என சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறினார்.

SCROLL FOR NEXT