தேசிய செய்திகள்

கொல்கத்தா: குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவெடிப்பு; ஒருவர் கைது

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தக்ஷின் நாராயண்பூர் பகுதியில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் குண்டு வெடித்தது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் குடியிருப்பு கட்டிடத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவெடிப்பு

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தக்ஷின் நாராயண்பூர் பகுதியில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் குண்டு வெடித்தது. அதில் கட்டிடத்தின் ஒருபகுதி சேதம் அடைந்தது. நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள், இதன் பின்னணியில் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஒருவர் கைது

குண்டுவெடிப்பில் யாரும் காயம் அடையவில்லை. இருப்பினும், அங்கு குடியிருப்பவர்களிடையே பீதி ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான சலீம் என்பவர் தலைமறைவாகிவிட்டார். வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கட்டிடத்தில் சலீம் ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்ததும், அங்கு ஒருவரிடம் கொடுத்துவிட்ட பையில் வெடிபொருட்களை வைத்து வெடிக்கச் செய்ததும் தெரியவந்தது.