லே,
லடாக் யூனியன் பிரதேசத்தில் தற்போதுள்ள லே (Leh) மற்றும் கார்கில் (Kargil) ஆகிய இரண்டு மாவட்டங்களுடன், புதிதாக 5 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 7 மாவட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று லடாக் துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா இந்த புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார். ஆகஸ்ட் 2024 இல் மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
1. சான்ஸ்கர் (Zanskar)
2. டிராஸ் (Dras)
3. ஷாம் (Sham)
4. நுப்ரா (Nubra)
5. சாங்தாங் (Changthang)
நிர்வாக வசதியை மேம்படுத்தவும், தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசின் சேவைகள் எளிதில் சென்றடையவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.