புது டெல்லி,
காங்கிரஸ் கட்சியின் பட்டியல் இன பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ஆகிய இரண்டும் இணைந்து இந்த சமூக விழிப்புணர்வு போட்டியை எற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பச்சை கொடியை அசைத்து “அம்பேத்கருக்காக ஓடுவோம், அரசியலமைப்புக்காக ஓடுவோம்” (Run for Ambedkar, Run for Constitution) எனும் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த மாரத்தான் ஓட்டத்தின் முக்கிய நோக்கம், அம்பேத்கரின் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் குறித்தும், அவரது தொலைநோக்குச் சிந்தனைகள் குறித்தும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.
அதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ராகுல் பேசியதாவது:-
அரசியலமைப்புச் சட்டம்' என்பதே அம்பேத்கரின் செய்தியாகும். இந்த அரசியலமைப்பு சட்டம் மட்டும் இல்லாவிட்டால், இன்றைய நிலையில் இந்தியாவை நம்மால் கண்டிருக்கவே முடியாது.
இன்று, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை ஒழித்துக்கட்ட விரும்புகிறார்கள். ஏனெனில், நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.
அம்பேத்கரின் சிலைக்கு முன்பாக பாஜகவினர் கைகூப்பி வணங்குவது போல் வெளியே தெரிந்தாலும், அவர்களின் ஆழ்மனதில் உள்ள உண்மையான நோக்கமும் சிந்தனையும் அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலுமாக அழிப்பதே ஆகும்.
மறுபுறம், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதே காங்கிரஸ் கட்சியின் குறிக்கோளாகும். அரசியலமைப்பு சட்டத்தின் செய்தி நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.