தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்

வருகிற 30-ந்தேதி ராணுவ தலைமை தளபதியாக தீரஜ் சேத் பதவியேற்க உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றார். இவர் இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், நாட்டின் 31-வது ராணுவ தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமிக்கப்பட்டு உள்ளார். வருகிற 30-ந்தேதி ராணுவ தலைமை தளபதியாக தீரஜ் சேத் பதவியேற்க உள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் சேத், தற்போது ராணுவத் துணைத் தலைமைத் தளபதியாகப் பணியாற்றி வருகிறார். 1986-ல் ராணுவதில் சேர்ந்த தீரஜ் சேத், ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சி எதிர்ப்பு படை, பாலைவனப் பகுதிகளில் கவசப் படைப்பிரிவு என ஏறக்குறைய 40 ஆண்டுகள் பல்வேறு கடினமான சூழல்களில் பணியாற்றிய மிகச் சிறந்த அனுபவம் கொண்டவர் ஆவார்.